திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.