திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
தேவதானப்பட்டியில் பிள்ளை செல்வமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.;
தேவதானப்பட்டியில் பிள்ளை செல்வமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து திருவாசகம் முற்றோதல் நடந்தது. காலையில் தொடங்கிய நிகழ்ச்சி மாலை 3 மணி வரை நடந்தது. இதில் தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.