கோத பரமேசுவரர் கோவிலில் திருவாதிரை விழா
நெல்லை அருகே கோத பரமேசுவரர் கோவிலில் திருவாதிரை விழா நடந்தது.
நெல்லை அருகே சங்காணி கிராமத்தில் பழமை வாய்ந்த கோத பரமேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 80 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாதிரை விழா நடைபெற்றது. இதையொட்டி ஹோமம், அபிஷேக ஆராதனை, நடராஜர்- சிவகாமி அம்பாள் கோவிலிலிருந்து எழுந்தருளி மேல திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோவிலுக்கு சென்றடைந்தனர். பின்னர் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு கருதி நடராஜர்- சிவகாமி அம்பாள் சிலைகள் இதுவரையிலும் பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டு இருந்தது. திருவாதிரையை முன்னிட்டு சுவாமி- அம்பாள் சிலைகள் சங்காணி கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.