திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-11-21 18:45 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தரம் உயர்த்த வேண்டும்

திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இந்த நிலையில், இந்த ஆஸ்பத்திரியை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். நகர் செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாயி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சக்திவேல், ஜெயராமன் உள்பட பலர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் ரவி, நீலமேகம், சின்னக்கருப்பன், கண்ணன், வசந்தி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். 13 டாக்டர்களை நியமிக்க வேண்டும். இரவு நேரங்களிலும் டாக்டர்கள் தங்கி பணியாற்ற வேண்டும். மாற்றுப்பணி என்ற பெயரில் இங்குள்ள டாக்டர்கள், நர்சுகளை வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்