திருநெல்லிக்காவல் சாலை சீரமைக்கப்பட்டது

தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருநெல்லிக்காவல் சாலை சீரமைக்கப்பட்டது.;

Update: 2022-10-01 18:45 GMT

கூத்தாநல்லூர்:

தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருநெல்லிக்காவல் சாலை சீரமைக்கப்பட்டது.

திருநெல்லிக்காவல் சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில் இருந்து, செருவாமணி வழியாக திருநெல்லிக்காவல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், சேந்தங்குடி, செருவாமணி, திருநெல்லிக்காவல், நால்ரோடு, சினையங்குடி, சூலமங்கலம், கூத்தன்பட்டு, கொளப்பாடு மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து மிகுந்த இந்த சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளித்தது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்தித்தனர்.

சாலை சீரமைப்பு

எனவே கடைவீதி சாலையை முழுமையான தார்சாலையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை முழுமையான தார்சாலையாக சீரமைத்தனர்.சாலையை சீரமைத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்