கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடந்தது.;

Update: 2022-12-06 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

திருக்கார்த்திகை திருவிழா

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூ‌ஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

பகல் 12 மணியளவில் உச்சிகால பூஜை நடைபெற்றது.‌ மாலை 5 மணியளவில் திரளான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சொக்கப்பனை

இரவு 8 மணியளவில் கோவிலில் நாரணதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு 10 மணிக்கு மேல வாசல் பகுதி அருகே வைக்கப்பட்டிருந்த சுமார் 15 அடி உயரமுள்ள சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ரத வீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், திருவள்ளுவர் கழக செயலாளர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்