ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வந்தவாசியில் ரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று ரங்கநாயகிக்கும், ரங்கநாத பெருமாள் சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.
இதையொட்டி சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது.
கோவில் அர்ச்சகர்கள் பி.ரங்கநாதன், எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்டோர் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கருட வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.
ஸ்ரீமந்நாதமுனி வைணவ சபை தலைவர் கு.மணிவண்ணன், ஓய்வுபெற்ற சார் ஆய்வாளர் கு.பாண்டுரங்கன், ஸ்ரீகிருஷ்ணா, பா.சீனிவாசன் உள்பட திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.