திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சோமசுந்தரம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Update: 2023-05-14 18:52 GMT

சோளிங்கர் அருகே உள்ள சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று திரவுபதி அம்மன், அர்ஜுனன் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை, தங்க ஆபரணங்கள், மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாக பூஜை செய்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்யாண விருந்து நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்