திருச்சி: ஸ்ரீரங்கம் அருகே சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

பாதாள சாக்கடையின் குழாய் வெடித்து சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.;

Update:2024-04-10 21:04 IST

திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலையில் ரெயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளத்திற்கு அடியில் இருக்கும் பாதாள சாக்கடையின் குழாய் வெடித்து சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை மாற்றுப்பாதையில் செல்லுமாறு போக்குவரத்து காவலர்கள் அறிவுறுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்