திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மருத்துவ முகாம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மருத்துவ முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கோவில் இணை ஆணையர் கார்த்திக் தொடங்கி வைத்தார். துளீர் அமைப்பு சார்பில் மதுரை மருத்துவ கல்லூரி டாக்டர் தர்மராஜ் செல்லையா தலைமையிலான மருத்துவ குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை கண்டறியப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் தினக்கூலி பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில் பாதுகாப்பு உதவி அலுவலர் ராமச்சந்திரன், முனைப்பு அலுவலர் புலவர் மகாமுனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.