திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனை

பிளஸ்-2 பொதுத்தேர்வில் திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-05-08 18:45 GMT

திருச்செந்தூர்:

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.

ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 45 மாணவர்கள் பிளஸ்-2 அரசு பொது தேர்வு எழுதினர். இதில் 44 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98 ஆகும். அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவர் செல்வசதீஷ் 600-க்கு 566 மதிப்பெண்களும், வரலாறு பாடப்பிரிவில் பயின்ற மாணவர் ஆனந்தகார்த்திக் 559 மதிப்பெண்களும், சக்திகுமார் 538 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் மாணவர் செல்வசதீஷ் தாவரவியல் மற்றும் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவர் ஆனந்தகார்த்திக் வரலாறு மற்றும் கணக்குப்பதிவியல் பாடத்தில்100 மதிப்பெண்களும், மாணவர் சக்திகுமார் வரலாறு பாடத்தில் 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் எப்ரேம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி

திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 190 மாணவிகளில் 187 பேர் தேர்ச்சி பெற்றனர். கணக்குப்பதிவியல் பாடப்பிரிவில் மாணவிகள் ஆர்.முத்துபேச்சி 600க்கு 586 மதிப்பெண்களும், மாணவி ஜி.ரேவதி 572 மதிப்பெண்களும், கணித அறிவியல் பாடப்பிரிவில் மாணவி வீ.சூர்யா 568 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். இதில் மாணவி முத்துப்பேச்சி கணக்குப்பதிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி உமாராணி வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், மாணவி வீ.சூர்யா தமிழில் 98 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் மாரியம்மாள், உதவி தலைமையாசிரியர் சங்கரி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பேச்சியம்மாள் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்