பாபநாசம் கோவிலில் தீர்த்தவாரி

பாபநாசம் கோவிலில் தெப்பத்திருவிழா, தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-14 20:26 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் கோவிலில் தெப்பத்திருவிழா, தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சித்திரை விசு திருவிழா

பாபநாசம் உலகாம்பிகை அம்மன் உடனுறை பாபநாச சாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.

ஒன்பதாம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. பத்தாம் திருநாளான நேற்று சித்திரை விசுவை முன்னிட்டு சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமி, அம்பாள் பூ பல்லக்கில் வீதி உலா வந்தனர்.

தீர்த்தவாரி

பகல் ஒரு மணிக்கு கோவில் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு தெப்ப உற்சவம் நடந்தது.

அதிகாலை சாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெற்றது.

சித்திரை விசு சிறப்பு ஆராதனை, தீர்த்தவாரி, தெப்பத் திருவிழா மற்றும் திருமணக் கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையொடடி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்