டயர் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் டயர் தொழிற்சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-10-16 18:18 GMT

வேலை நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் டி.சி.சி. யூனிட் பிரிவில் வேலை பார்க்கும் தொழிலாளர் நல சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 7 மணி முதல் பணிகளை புறக்கணித்து நுழைவு வாயில் அருகே அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேண்டீன் உணவு

அப்போது அவர்கள் தொழிற்சாலை கேண்டீனில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றும், உணவு பற்றாக்குறையாக உள்ளது என்றும், 3½ ஆண்டுகள் பயிற்சி முடித்த தொழிலாளருக்கு வழங்கும் நிரந்தர தொழிலாளர் ஆணையை வழங்காமல் காலதாமதம் செய்வதாகவும், குறைந்த செயல்பாடு கொண்ட தொழிலாளர்களை திடீரென்று பணியில் இருந்து நிறுத்தம் செய்வதாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளனர். வேலை நிறுத்தம் போராட்டம் இரவிலும் நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்