டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்

ஜல்லி, எம்.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-09-16 15:28 GMT

ஜல்லி, எம்.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலை டிப்பர் லாரி அனைத்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூர் ஆகிய தாலுகாக்களில் செயல்பட்டு வரும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பொருட்களை எடையில் ஏற்றக் கூடாது.

யூனிட்டில் தான் ஏற்ற வேண்டும். மேலும் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தியும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கிரசர் மிஷின் உரிமையாளர்கள் ஜல்லி மற்றும் எம்.செண்ட் விலையை நிர்ணயம் செய்து அதனை ஏற்றுமதி செய்து விற்பனை ஈடுபட்டு வருகின்றனர். ஒரு யூனிட் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை எம்.சாண்ட் விற்பனை செய்து வருகின்றனர்.

டிப்பர் லாரி உரிமையாளர்கள் எம்.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிரஷர் மிஷின் உரிமையாளர்கள் அவர்களாகவே டிப்பர் லாரிகள் வைத்து கொண்டு இறக்குமதி செய்து வருகின்றனர். இதனால் தனியார் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

டிப்பர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவண்ணாமலை எடப்பாளையம் பைபாஸ் சாலையில் தங்களது லாரிகளை உரிமையாளர்கள் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்