தமிழக-கேரள எல்லையில் புலி நடமாட்டம்

தமிழக-கேரள எல்லையில் புலி நடமாட்டம் உள்ளது. இதனால் இரவில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-14 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனைச்சாவடியில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரிக்கும், ஊட்டியில் இருந்து கண்ணூருக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பந்தலூர், கூடலூர் தாலுகா பகுதிகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், மருத்துவ தேவைகளுக்கான கர்ப்பிணிகள், நோயாளிகள் சுல்தான்பேத்தேரிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் பாட்டவயல் அருகே தமிழக-கேரள எல்லையையொட்டி புலி ஒன்று சோர்வுடன் நடமாடியது. இதை பார்த்த பொதுமக்கள் முத்தங்கா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பசு மாடுகளை புலி அடித்து கொன்று வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன், வனகாப்பாளர் மில்டன் பிரபு மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பாட்டவயல்-சுல்தான்பத்தேரி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்