தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நத்தம் அருகே தொழிலாளி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-11 18:45 GMT

நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர், அதே பகுதியை சோ்ந்த ஜோதி என்பவரை கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பிரபாகரனை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் பிரபாகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்