வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நவல்பட்டு பங்காரு அடிகளார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 27). இவர் சங்கிலி பறிப்பு வழக்கில் பொன்மலை போலீசாரால் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருச்சி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களில் உள்ள சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர் என்பதாலும், சிறையில் இருந்து வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் என்றும் கருதி வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.