வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
போடி துரைராஜபுரம் காலனியை சேர்ந்த ஜெயபால் மகன் நாகராஜ் (வயது 29). அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதால் போடி போலீசார் அவரை கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.