வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2023-09-05 19:00 GMT

நெல்லை மாவட்டம் பத்தமடை மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 29). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை பத்தமடை போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, பிச்சையாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி இதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்