மாற்றுத்திறனாளிகள் இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம்
இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி பெற மாற்றுத்திறனாளிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.;
இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி பெற மாற்றுத்திறனாளிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த 65 வயது வரையுள்ள கல்விபயிலும், சுயத்தொழில் புரியும் அல்லது தனியார் துறையில் பணிபுரியும் இருகால்கள், ஒரு கால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது.
தேவைப்படுபவர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், கல்விபயிலும், சுயத்தொழில் புரியும் அல்லது தனியார் துறையில் பணி புரிவதற்கான சான்று, தற்போதைய புகைப்படம் 4 ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ- சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நேர்காணல்
விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுடன் வருகிற 17-ந்தேதியன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் மாற்றுத்திறனாளிகள் தவறாது கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.