மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம்மிளகாய் வத்தலை விவசாயிகள்விற்பனை செய்ய யோசனை

மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் மிளகாய் வத்தலை விவசாயிகள் விற்பனை செய்ய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2023-03-12 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட மிளகாய் வத்தல் விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை விற்பனைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு பிரசாரம்

தூத்துக்குடி மாவட்ட மிளகாய் வத்தல் விவசாயிகள் மத்தியில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், மிளகாய் வத்தலை விற்பனை செய்ய வலியுறுத்தி நெல்லை விற்பனைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இந்த விற்பனைக்குழு செயலாளர் எழில் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் அழகுலெட்சுமி, தண்டாயுதபாணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆறுமுகதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இருப்பு வைத்து விற்பனை

விழிப்புணர்வு பிரசாரத்தில் அவர்கள் கூறியதாவது:-

மிளகாய் வத்தல் அறுவடை செய்யும் விவசாயிகள் அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள குளிர்பதன கிட்டங்கிகளில் இருப்பு வைத்து விலையேற்ற காலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பெறலாம். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள கிட்டங்கிகளில் விவசாயிகள் தங்கள் விலைபொருட்களை குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 10 பைசா வீதம் வாடகைக்கு இருப்பு வைத்து கொள்ளலாம்.

மேலும் வியாபாரிகள் மிளகாய் வத்தல்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை செய்தால், வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் உங்கள் பொருட்களை நல்ல விலைக்கு கொள்முதல் செய்வார்கள். விளைபொருளுக்கு பொருளீட்டு கடன் அதிக பட்சமாக ரூ.3 லட்சம் (5 சதவிகித வட்டி) வரை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

பிரசாரம் நடைபெற்ற பகுதிகள்

இந்த பிரசாரம் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குச்சாலை, சண்முகாபுரம், வள்ளிநாயகிபுரம், குளத்தூர், வீரபாண்டியபுரம், முத்துராமலிங்கபுரம், கெச்சிலாபுரம், ராமச்சந்திராபுரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்