மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்

தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2022-06-19 17:14 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர்-ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான தங்கச்சாமி மகன் பாஸ்கர் என்பவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், பேரூர் செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்