தூத்துக்குடி சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில்குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
தூத்துக்குடி சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.;
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் குரூப்-4 தேர்வுகள் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா அகாடமியில் நடந்தது. விழாவுக்கு நிறுவனர் து.சுகேஷ் சாமுவேல் தலைமை தாங்கி பேசுகையில், சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் குரூப்-4 தேர்வுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது. 33 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் நீங்கள் நன்றாக பயிற்சி பெற்று வெற்றி பெற்று உள்ளீர்கள். சுமார் 18 லட்சம் பேர் எழுதிய தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று இருப்பதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் தொடர்ந்து பயிற்சி பெற்றால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள்தேர்வுக்கு தயாரான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் பேச்சியம்மாள், வணிகவரித்துறை உதவி ஆணையர் ஸ்ரீதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாகாப்பு அலுவலர் கனிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.