தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்டும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ,
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். . பெரும் அதிர்ச்சியைஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18-ந்தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்டும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.