தரமான உணவு சவால்கள் குறித்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்துக்குவிருது

தரமான உணவு சவால்கள் குறித்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்துக்குவிருது கிடைத்துள்ளது.

Update: 2022-06-16 11:17 GMT

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் சார்பில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தரமான உணவு சவால்கள் குறித்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு விருது மற்றும் சான்றிதழை பெற்று உள்ளது. இந்த விருதுக்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்