அரங்குளநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

அரங்குளநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update: 2022-09-30 19:32 GMT

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையையொட்டி பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுமங்கலி பெண்கள், கன்னிப்பெண்கள் விரதம் இருந்து கோவில் வாசலில் 100-க்கும் மேற்பட்டோர் திருவிளக்கு பூஜை நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்