திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்பு வரை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் ஆண்டு தோறும் 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது. கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அதன்பின்னர் கோவிலில் திருப்பணி நடைபெற்று வந்ததால் 6 ஆண்டுகள் திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை.
கடந்த ஜூலை மாதம் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து இந்த ஆண்டு முதல் மீண்டும் திருவிளக்கு பூஜை நடத்த விவேகானந்தா கேந்திராவின் கிராம முன்னேற்ற திட்ட அமைப்பு முன் வந்தது. அதன்படி நேற்று மாலையில் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடந்தது. வெள்ளிமலை சாமி சைதன்யா மகராஜ் தலைமை தாங்கி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து அலங்கார தீபாராதனைக்கு பின்னர் திருவிளக்கு பூஜை தொடங்கியது.
இந்த பூஜையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையொட்டி விளக்கணி மாடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.