திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.;
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக்அலிபேக், மேலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக்குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்வது, கவுன்சிலர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவல பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.