திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளி ராஜஸ்தானில் கைது
ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளியை ராஜஸ்தானில் வைத்து திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி, 4 ஏ.டி.எம். மையங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளியடித்துச் சென்றனர். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க திருவண்ணாமலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 6-வதாக சிராஜுதீன் என்ற நபரை ராஜாஸ்தானில் வைத்து திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அந்த நபரை தமிழகத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.