திருவள்ளூர்: அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தல் - போலீஸ் விசாரணை
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தப்பட்டதாக புகார் வந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார். அதிமுக நிர்வாகி. இவர் பல்லவாடா ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர். இவரது மனைவி ரோஜா (வயது 44). கவுன்சிலர்.
இன்று மதியம் ரமேஷ் குமார் தனது மனைவி ரோஜாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது ரோஜாவும், அவரது மகன் ஜேக்கப்பும் வீட்டில் இல்லை. அவர்கள் கடத்தப்ப்பட்டிருக்கலாம் என நினைத்த அவர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரமேஷ் குமார் வீட்டில் இருந்த கண்கானிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.