பழனி ஆண்டவர் கோவிலில் திருவாதிரை விழா தொடக்கம்
வாசுதேவநல்லூர் பழனி ஆண்டவர் கோவிலில் திருவாதிரை விழா தொடங்கியது.;
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பாலச்சந்திர விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள ராஜபழனி ஆண்டவர் கோவிலில் 96-வது ஆண்டு திருவாதிரை குருபூஜை விழா நேற்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் தில்லை நடராஜபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பஜனை குழுவினர் சார்பில் மார்கழி மாத திருவாதிரை விழா பஜனை நடைபெற்றது. தினமும் காலையில் தேவாரம், திருவாசகம் பாடி பஜனை வீதி உலா நடைபெறும்.
வருகிற 6-ந்தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனமும், அதைத்தொடர்ந்து மாலை மகேஸ்வர பூஜை, அன்னதானமும் நடைபெறுகிறது.