திருவாடானை கோர்ட்டில் ஆள் மாறாட்டம் செய்த வாலிபர் மீது வழக்கு

திருவாடானை கோர்ட்டில் ஆள் மாறாட்டம் செய்த வாலிபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.;

Update: 2022-12-23 18:45 GMT

தொண்டி, 

தொண்டி போலீஸ் நிலையத்தில் சுமார் 10 ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 11 பேர் திருவாடானை கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். சிறிது நேரத்தில் அதில் ஒருவர் வேறு ஒருவருக்காக ஆஜரானது தெரியவந்துள்ளது.உடனே நீதிபதி அந்த நபரை மீண்டும் அடையாள அட்டையுடன் ஆஜராகும்படி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து 10 நபர்கள் மட்டும் ஆதார் அட்டையுடன் ஆஜராகினர். ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அப்துல் ரவூப் என்பவருக்கு பதிலாக அவரது மைத்துனரான தொண்டியைச் சேர்ந்த தமீம் அன்சாரியின் மகன் ரிஸ்வான் (வயது 22) ஆள் மாறாட்டம் செய்து ஆஜரானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்ற தலைமை எழுத்தர் மோகனசுந்தரம் திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, ரிஸ்வான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்