திருத்தணி அரசு கல்லூரி மாணவர்களுக்கு சீருடை

திருத்தணி அரசு கல்லூரியை சிறந்த கல்லூரியாக மாற்றும் நோக்கில் மாணவ, மாணவியருக்கு சீருடை கொண்டு வரப்பட்டுள்ளது.

Update: 2023-10-12 14:02 GMT

திருத்தணி அடுத்த மேதினிபுரம் பகுதியில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இக்கல்லூரியில் சீருடை கட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கையின் போது மாணவ, மாணவியர் கல்லூரிக்கு ஒரே மாதிரியான சீருடைகளை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்தாண்டு முதல் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சீருடை அணிந்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பூர்ணசந்திரன் கூறுகையில், மாடல் உடைகளை மாணவர்கள் அணிந்து வருவதால் பல்ேவறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த கல்லூரியை சிறந்த கல்லூரியாக மாற்றும் நோக்கில் மாணவ, மாணவியருக்கு சீருடை கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சீருடை அணிந்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் சீருடை அணிந்து வர திட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்