திருமருகல் ஒன்றியக்குழு கூட்டம்
திருமருகல் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. .கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் அனைத்து துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் நன்றி கூறினார்.