ஐவர்பாடி அய்யனார் கோவிலில் திருக்கல்யாணம்

ஐவர்பாடி அய்யனார் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-05-13 18:31 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் உள்ள நல்ல சேவுக அய்யனார் என்று அழைக்கப்படும் பூர்ணகலா புஷ்கலா சமேத ஐவர் பாடி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, 48-வது நாளான நேற்று மண்டலாபிஷேக நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பூர்ணகலா, புஷ்கலா சமேத ஐவர் பாடி அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி ஐவர் பாடி அய்யனாரை குலதெய்வமாக கொண்ட குடும்பத்தில் இருந்து வேறு குடும்பத்திற்கு திருமணமாகி சென்ற பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், விமரிசையாக சீர்வரிசை எடுத்து வந்தனர். சிறப்பு வேள்விகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியங்களோடு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து பூர்ணகலா புஷ்கலா அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. மாங்கல்யதாரணம் செய்து வைக்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பினர். பின்னர் குலதெய்வ வழிபாட்டு குழுவினர் சார்பில் திருமண விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் இடங்கண்ணி கிராமத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திருமணமாகிச்சென்ற அனைத்து பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் இடங்கண்ணி, அன்னங்காரம்பேட்டை, குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்