அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2022-09-06 17:04 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் உள்ள அபிஷ்ட வரதராஜபெருமாள் கோவிலில் ஆவணி மாத ஆண்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக வரதராஜ பெருமாளும், பெருந்தேவி தாயாரும் எழுந்தருளி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி புது பட்டு ஆடைகள் உடுத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்