ஊத்தங்கால் தணிகைவேல் முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ஊத்தங்கால் தணிகைவேல் முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-04-08 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தில் வள்ளி தெய்வானை சமேத தணிகை வேல் கோவில் உள்ளது. மேலும் இக்கோவிலில் 47 அடி உயர முருகன் சிலை அமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் நிறைவு நாளையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் ஊர் பொது மக்கள் திரண்டு மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என இரு தரப்பாக பிரிந்து சீர் வரிசை தாம்பூலங்களை ஏந்திக் கொண்டு ஊர் வலமாக தணிகை வேல் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை தணிகை வேல் முருகன் எழுந்தருளினார். தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாதீப ஆராதனையும், திருக்கல்யாண விருந்து உபசரிப்பும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி உதயகுமார், கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்