திம்பம் மலைப்பாதையில்பள்ளத்துக்குள் பாய்ந்த சரக்கு வேன்
திம்பம் மலைப்பாதையில் பள்ளத்துக்குள் சரக்கு வேன் பாய்ந்தது.;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. இந்த கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் குறுகலாக இருப்பதால் சரக்கு வாகனங்கள் அங்குள்ள வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்பட்டு பள்ளத்துக்குள் கவிழ்ந்து விழுவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாகவிட்டன.
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து கோவைக்கு தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையின் 1-வது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 12 மணி அளவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர தடுப்பு சுவரில் ேமாதியதுடன், அருகில் இருந்த பள்ளத்துக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனின் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.