சிதம்பரம்தில்லைக்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்4-ந் தேதி நடக்கிறது

சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.;

Update: 2023-08-26 21:38 GMT

சிதம்பரம், 

தில்லைக்காளி அம்மன்

சிதம்பரத்தில் பழமை வாய்ந்த தில்லைக்காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததையொட்டி வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. தொடர்ந்து 31-ந் தேதி காலை 8 மணியளவில் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜையும், மாலை 6 மணியளவில் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் மற்றும் ரக்ஷா பந்தனம் நடக்கிறது. பின்னர் 1-ந் தேதி மாலை 6 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை, வடுக பூஜை, மகா பூர்ணாகுதி நடக்கிறது.

4-ந் தேதி கும்பாபிஷேகம்

இதையடுத்து 2-ந் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், கன்யா பூஜையும், 3-ந் தேதி நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கால யாகசாலை பூஜையும், தம்பதி பூஜை, பிம்ப சுத்தி பூஜை, ருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக நாளான வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கடயாத்ராதானம், தசதானம், பஞ்சதானம், இஷ்டதானம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணியளவில் தில்லைக்காளி அம்மன் மற்றும் தில்லை அம்மனுக்கும், விநாயகர், சுப்ரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்