குண்டடம் அருகேவீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன்நகையை திருடி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை திருட்டு
குண்டடம் அருகேகுள்ளாய் பாளையத்தை அடுத்துள்ள சாலையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். அவரது மனைவி மீனா. இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை காணாமல் போனது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து குண்டடம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை ே பாலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.