தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டம்

தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-02-09 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்முருகன், சீனிவாசன், வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் வரவேற்றார்.

கூட்டத்தில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான தச்சுப்பட்டறை கருமார அலகு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் சமுதாய கூடம் அல்லது வணிக வளாகம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஒன்றிய வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கொளஞ்சிவேலு, செல்வராஜ், தயாபரன் மற்றும் பொறியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்