அகலூர் ஆதீஸ்வரசுவாமி கோவிலில் தேர்திருவிழா

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு அகலூர் ஆதீஸ்வரசுவாமி கோவிலில் தேர்திருவிழா நடைபெற்றது.;

Update:2023-03-23 00:32 IST

செஞ்சி, 

செஞ்சி அருகே அகலூர் கிராமத்தில் உள்ள 1008 ஸ்ரீ ஆதீஸ்வரசுவாமி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் தேரில் உற்சவர் தரணேந்திர பத்மாவதி தாயார் எழுந்தருளினார். இதையடுத்து தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் திரளான ஜெயினர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம ஜெயின் பிரமுகர்கள் அப்பாண்டிராஜன், சந்திரபிரபா, சமூக சேவகர் ஜோலாதாஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்