முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டம்

குறிச்சிக்குளம், சிலட்டூர் முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-06-13 18:39 GMT

ஆவுடையார்கோவில்:

முத்துமாரியம்மன் கோவில்

ஆவுடையார்கோவில் அருகே குறிச்சிக்குளத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 5-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேராட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரில் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு தீமிதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டத்தில் பலா பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனை பக்தர்கள் வீட்டிற்கு வாங்கி சென்றனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே சிலட்டூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்