"பொதுக்குழு மேல்முறையீட்டு மனுவில் சாதகமான தீர்ப்பு வரும்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

பொதுக்குழு மேல்முறையீட்டு மனுவில் சாதகமான தீர்ப்பு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.;

Update: 2022-08-22 17:17 GMT

சென்னை,

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நாளைய தினம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்கின்றனர்.

பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வர உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.

இந்தநிலையில், பொதுக்குழு மேல்முறையீட்டு மனு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. வெளிப்படை தன்மையோடு, தொண்டர்கள் தாமாக முன்வந்து, பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தீர்மானத்தை நிறைவேற்றி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு சாதகமானதாக வரும். அதிமுக ஜனநாயக பாதையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபட்டு ஒரு மாபெரும் சக்தியாக வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்