மர பலகைகள் சாலையில் விழுந்ததால் பரபரப்பு
கிணத்துக்கடவு அருகே லாரியில் இருந்து மர பலகைகள் சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவில் இருந்து மர பலகைகளை ஏற்றி கொண்டு லாரி கொண்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்த மர பலகைகள் சரிந்து சாலையில் விழுந்தன. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் டிரைவரிடம் தெரிவித்து, லாரியை நிறுத்தினர். இதையடுத்து சாலையில் விழுந்து கிடந்த மர பலகைகள் அகற்றப்பட்டது. லாரியில் இருந்து மர பலகைகள் கீழே விழும்போது, பின்னால் வாகனங்கள் எதுவும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.