பாலக்கோடு ஒன்றியக்குழு கூட்டத்தில்கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு

Update:2023-01-31 01:00 IST

பாலக்கோடு:-

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கோபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய வரவு- செலவு கணக்குகளை அதிகாரிகள் வாசித்தனர்.

கூட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த கவுன்சிலர் கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் பல கோடி ரூபாய் பணிகள் நடந்து வருவதாக சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி கோஷமிட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. அதன்பிறகு கவுன்சிலர்கள் ஒப்புதல் பெற்ற பிறகே பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகே கூச்சல் குழப்பம் முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் அழகு சிங்கம், முத்துசாமி, முத்தப்பன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்