மின் கம்பியில் பதாகை தொங்கியதால் பரபரப்பு

மணப்பாறையில் மின் கம்பியில் விளம்பர பதாகை தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-05 19:44 GMT

மணப்பாறையில் மின் கம்பியில் விளம்பர பதாகை தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பர பதாகை

மணப்பாறை கடைவீதியில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான கட்டித்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று மணப்பாறை பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது, அந்த நிறுவனத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை காற்றில் அறுந்து மின்கம்பி மீது விழுந்தது. மக்கள் அதிக கூடும் இடங்களில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைகண்ட அப்பகுதியினர் மின்வாரிய அலுவலகத்திற்க தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மின்வாரிய உதவியாளர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை உடனடியாக நிறுத்தினர். மேலும் விளம்பர பதாகை யார் மீதும் விழுந்திடாத வண்ணம் மின் கம்பியை கழற்றி பின்னர் அந்த விளம்பர பதாகையை முழுவதுமாக அகற்றினர். பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். எனவே இதுபோன்று அதிக உயரத்தில் விளம்பர பதாகை வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்கம்பிகள் அறுந்தன

சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் வழியாக விறகுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது, மின்கம்பிகள் மீது விறகு உரசியதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அதிர்ஷ்ட வசமாக லாரிமீது மின்சாரம் பாயவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அந்த வழியாக வந்த மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்து மீண்டும் மின்சாரம் வினியோகிகப்பட்டது. மேலும் இப்பகுதியில் பெரும்பாலான மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்