அரசு பஸ்சில் படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு

பாவூர்சத்திரத்தில் அரசு பஸ்சில் படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-06 19:00 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசியில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம் வழியாக நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

பாவூர்சத்திரத்தில் ெரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் பஸ் வந்த போது, பஸ்சின் பின்பக்க படிக்கட்டு சாலையோரம் இருந்த தடுப்பு ஒன்றில் இடித்து உடைந்தது. இதனால் அந்த பஸ்சில் வாசல் வழியே பயணிகள் ஏறவும் இறங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வேறு பஸ் வரவில்லை. தொடர்ந்து தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து பஸ்சில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சுமார் 1½ மணி நேரம் பயணிகள் அவதிப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்