குடியிருப்பில் புகுந்த கரடியால் பரபரப்பு

குடியிருப்பில் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-12-11 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை இருக்கிறது. அங்கு பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கரடி ஒன்று பெரியார் நகரில் புகுந்தது. அங்குள்ள வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றது. இதை பார்த்து வளர்ப்பு நாய் குரைத்தது. சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் விளக்கை ஒளிரச் செய்து பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்தபோது கரடி வீட்டு வாசலில் உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சற்று நேரம் அங்கேயே நின்ற கரடி பின்னர் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளை கூண்டு வைத்துப் பிடிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்