மனு கொடுக்க பெட்ரோல் பாட்டிலுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க பெட்ரோல் பாட்டிலுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்ப்பட்டது;
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக நேற்று ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் ஒரு பையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் பெட்ரோலை நிரப்பி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெட்ரோல் பாட்டிலை போலீசார் கைப்பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆவூர் கீழத்தெருவை சேர்ந்த தங்கபாலு என்பவரின் மனைவி அஞ்சலிதேவி என்பதும் அவர்களது மகன் சேரன் என்பதும் தெரிய வந்தது. இவர், கடந்த 28-ந் தேதி இரவு தனது தம்பி தினகரன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோருடன் ஆவூர் கடைத்தெருவில் நின்று கொண்டிருந்தபோது அவர்களை சிலர் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியது தெரிய வந்தது.
இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் சேரன் புகார் அளித்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த சேரன் குடும்பத்தினர் பெட்ரோலுடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.